பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சமீபத்தில் ஒரு டிராவில் முடிந்தது. ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முறையே முதலிடத்திலும், 2-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவின் விராட் கோலி 5 வது இடத்திலும், ரிஷாப் பந்த் 6 வது இடத்திலும், ரோஹித் சர்மா 7 வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 2 வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஜடேஜா 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 4 வது இடத்தில் உள்ளார்.
Facebook Comments Box