மிகவும் பெரியதென தோன்றும் இந்த மாம்பழம் ரூ.900 எனும் விலையைக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால், இது உண்மையாகும். ‘நூர்ஜஹான்’ என்ற வகையைச் சேர்ந்த இந்த மாம்பழங்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன.
பண்டைய காலத்தில் இந்த நூர்ஜஹான் மாம்பழத்தை அரச குடும்பத்தினர் விரும்பி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அருமையான சுவையை உடைய இந்த வகை மாம்பழங்கள், தற்போது தெலங்கானா மாநிலத்தின் அதிலாபாத் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த மாம்பழங்கள் ஒவ்வொன்றும் 2 முதல் 5 கிலோ எடையைக் கொண்டுள்ளன. நேற்று ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனையாகியது. ஒரு வாடிக்கையாளர் வாங்கிய மாம்பழம் 3 கிலோ எடையுடையது. எனவே, அவர் ரூ.900 கொடுத்து அதை வாங்கிச் சென்றார்.
Facebook Comments Box