மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் கொரோனா குறித்த சர்ச்சை பேச்சால் அவர் மீது எப்.ஐ.ஆர் வழக்கு போடபட்டுள்ளது. போபாலில் பா.ஜ.க மாநில தலைவர் மற்றும் இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கமல்நாத் மீது ஐ.பி.சி 188 மற்றும் 54 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த எப்.ஐ.ஆர் பதிவில் குறிப்பிட்டு இருப்பது யாதெனில் கமல்நாத் உஜைனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் “தற்போது உலகமெங்கும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவின் மாறுபாடு உடைய வைரஸ்” என்ற அவருடைய சர்ச்சை பேச்சு மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி அவர், “அரசாங்கம் மக்களின் உண்மையான இறப்பு கணக்கை மறைப்பதாகவும்” ஒரு பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து மக்களை பீதியில் ஆழ்த்தி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.
Facebook Comments Box