சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

0

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு – ஜூன் 18 நிலவரம்

சென்னையில் இன்று (புதன்கிழமை), 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வை சந்தித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பவுன் தங்கம் ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச பொருளாதார நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பானது அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், உலக நாடுகளில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும் தங்கத்தின் விலைக்கு நேரடியாகக் தாக்கம் ஏற்படுத்துகின்றன. இதனால் தங்கம் விலை உயரும் சூழ்நிலையும், குறையும் நிலையும் ஏற்படக்கூடும்.

இன்றைய நிலவரப்படி (ஜூன் 18), 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250-ஆகவும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000-ஆகவும் விற்பனையாகிறது.

தங்கத்துடன் இணைந்து வெள்ளி விலையிலும் உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.122-ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,22,000-க்கு விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here