இந்திய கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக செல்ல உள்ளது. இந்த பயணத்தின் போது 3 ஒருநாள் போட்டிகளும், 5 டி20 ஆட்டங்களும் உள்ளன. ஒருநாள் தொடரின் தொடக்கப் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. டி20 தொடரின் இறுதி ஆட்டம் நவம்பர் 8-ம் தேதி பிரிஸ்பனில் நடைபெறும்.

இத்தொடர் தொடங்க இன்னும் நான்கு மாதங்கள் இருந்தும், இத்தொடருக்கான 90,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சிட்னியில் நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டி மற்றும் கான்பெராவில் நடைபெறும் முதல் டி20 ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முற்றிலும் விற்றுவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. விற்பனையான டிக்கெட்டுகளில் 16% இந்திய ரசிகர் மன்றங்களால் வாங்கப்பட்டுள்ளன.

Facebook Comments Box