சென்னையில் நேற்று தொடங்கிய எஸ்என்ஜே குழுமம் நடத்தும் 71-வது மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் சீனியர் வாலிபால் போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஆடவர் பிரிவில் நடந்த போட்டிகளில், திருமயம் அண்ணா அணி 25-21, 25-15 என்ற கணக்கில் ஈரோடு கொங்கு கல்லூரியை தோற்கடித்தது. சென்னை ஐசிஎஃப் அணி 25-14, 25-20 என்ற புள்ளிக்கணக்கில் மயிலாடுதுறை செவன் ஸ்டார் அணியை வென்றது.
மகளிர் பிரிவில், எஸ்ஆர்எம் ஸ்பைக்கர்ஸ் 25-15, 25-12 என்ற கணக்கில் உண்ணாமலை ஸ்போர்ட்ஸ் கிளப்பை வீழ்த்தியது. மினி ஸ்போர்ட்ஸ் அகாடமி 25-9, 25-8 என்ற கணக்கில் சூளை பிரண்ட்ஸ் அணியை முறியடித்தது. எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணி 25-23, 25-22 என்ற புள்ளிகளில் சிவந்தி கிளப்பை தோற்கடித்தது.
போட்டி தொடங்கும் முன்னதாக கோப்பை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, நடிகர் பிரசாந்த், தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் அர்ஜூன் துரை, பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.