விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் தரவரிசை வீராங்கனை அரினா சபலெங்கா, 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சபலெங்கா, செக் குடியரசைச் சேர்ந்த 48-ம் நிலை வீராங்கனை மேரி பவுஸ்கோவாவை எதிர்கொண்டார். இதில் சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற நேரடி செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல், 6-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் மேடிசன் கீஸ், செர்பியாவின் 37-ம் நிலை வீராங்கனை ஓல்கா டானிலோவிச்சை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முன்னேறினார்.
குரோஷியாவின் 22-ம் நிலை வீராங்கனை டோனா வெகிக், ஸ்பெயினைச் சேர்ந்த 102-ம் நிலை வீராங்கனை கிறிஸ்டினா புக்சாவிடம் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
அதேபோல், கனடாவைச் சேர்ந்த 29-ம் நிலை வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ், ஜெர்மனியின் 104-ம் நிலை வீராங்கனை லாரா சீக்மனிடம் 2-6, 3-6 என்ற செட்டில் முந்திவிடப்பட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 12-ம் நிலை அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோ, இங்கிலாந்தின் 61-ம் நிலை வீரர் கேமரூன் நோரியுடன் மோதினார். 2 மணி நேரம் 56 நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தில் கேமரூன் நோரி 4-6, 6-4, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று 3-வது சுற்றில் இடம்பிடித்தார்.
அமெரிக்காவின் 29-ம் நிலை வீரர் பிரண்டன் நகஷிமா, சீனாவின் 71-ம் நிலை வீரர் யுன்சாவோகேடே பூவை 6-4, 4-6, 7-6 (7-1), 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.