ரஷ்யாவை சேர்ந்த கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி , மே 1-ம் தேதி இந்தியா வர உள்ளது.
இந்தியாவில், தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனாவின் 2வது அலை வேகமாக இருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால், 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது. இதனிடையே,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாக, ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே 1ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக, அந்த மருந்தை உற்பத்தி செய்யும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்து உள்ளது. அதேநேரத்தில் எவ்வளவு மருந்து இந்தியா வர உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் அளவு உற்பத்தி செய்ய 5 இந்திய நிறுவனங்களுடன் ரஷ்ய அமைப்பு ஒப்பந்தம் போட்டு உள்ளது.
Facebook Comments Box