நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,263 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர்.

நாட்டில் நாள்தோறும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,62,63,695 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதித்த 2,263 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,93,279 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,48,159 . தற்போது 24,28,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 13,54,78,420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Facebook Comments Box