மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நோற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.
இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நோற்று தாக்கல் செய்தார். மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் நோற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. 7 சதவீத உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன.
இதனிடையே, வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் 6 மாதத்திற்கு பின் மசோதா மாற்றியமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box