இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனாவால் புதிதாக 12,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 642-ஆக அதிகரித்துள்ளது. 
தேசிய அளவில் கொரோனாவில் இருந்து 97.32 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது. தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,37,567 ஆக உள்ளது.
இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 82,63,858 -ஆக உள்ளது.
Facebook Comments Box