உத்தரபிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, குஷி நகரில் வசிப்பவர் மான்யா. இவரது தந்தை ஆட்டோ ஓட்டுகிறார். காலையில் கல்லுாரி, மாலையில் வீட்டு வேலை, இரவு, ‘கால்சென்டரில்’ பணி என, நாள் முழுதும் உழைக்கும் மான்யாவுக்கு,அழகுக் கலையில் அதீத ஆர்வம் உண்டு.
அதனால், ‘வி.எல்.சி.சி., பெமினா மிஸ் இந்தியா’ அழகிப் போட்டிக்கு விண்ணப்பித்து, படிப்படியாக பல கட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றார். சமீபத்தில் மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில், மான்யா, ‘மிஸ் இந்தியா’ அழகியாக, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
”சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், முயற்சியை கைவிடாமல் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்,” என்கிறார், மான்யா. இப்போட்டியில்,தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா, ‘ பெமினா மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Facebook Comments Box