ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 20 நாள்களில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி என்ற அறக்கட்டளை நிதித்திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுமானத்திற்காக பல்வேறு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20 நாள்களில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ஆம் தேதி வரை நிதித்திரட்டும் பணி நடைபெறும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
Facebook Comments Box