மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 10ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வாகவும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வாகவும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் காணொலி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம், பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் அமளி ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments Box