திருப்பூரில், நேற்று, அண்ணாமலை, கூறியதாவது:அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில், விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி என்று முதல்வர் அறிவித்தார். நேரடியாக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும். அரசியல் பேச வேண்டும் என்பதற்காக, எல்லா விஷயத்தையும் தி.மு.க.,வினர் எதிர்ப்பது சரியாக இருக்காது.
கேந்திர வித்யாலயாவில், தமிழ் புறக்கணிக்கப்படவில்லை. பா.ஜ.,வின் வேல் யாத்திரை பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின், உதயநிதி, திருமாவளவன் எல்லோரும் வேல் எடுத்துள்ளனர். ஹிந்து விரோத தி.மு.க.,வை நிச்சயமாக மக்கள் புறக்கணிப்பர். இதை தெரிந்து தான், வேல் எடுப்பது போன்ற, ‘நாடகம்’ நடத்துகின்றனர்.
பிப். 21ம் தேதி சேலத்தில், பா.ஜ., இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
Facebook Comments Box