உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு தொடர்ந்து பல்வேறு மீட்பு படைகளின் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் கூறுகையில், உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். நெருக்கடியை களைவதற்காக மத்திய அரசு, மாநில அரசு முயற்சி மேற்கொள்கின்றன என்று நம்புகிறேன் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box