ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
Facebook Comments Box