உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் இன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் தனது செய்திக் குறிப்பில், “உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் அருகே பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு கவலையளிப்பதாக உள்ளது. அப்பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box