உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
இந்த வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்துள்ளது. 
வெள்ள பாதிப்பு, மீட்புப்பணி நடவடிக்கைகள் குறித்து உத்தரகண்ட் முதல்வருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 
Facebook Comments Box