அமைச்சகத்தின் அங்கமான, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின், உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், புதிய மின்னணு கொள்கையை வகுப்பதில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தரவுகள், நுகர்வோர் உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியகொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மின்னணு வர்த்தகத்தில், தரவுகள் குறித்த அம்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருப்பினும், அனைத்து வித தரவுகள் சம்பந்தப்பட்ட தரவுகள் சட்ட வரைவு, பார்லிமென்டில் உள்ளது. தரவுகள் சட்டம் எப்படி வருகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது எப்படி வருகிறதோ, அதன்படி தான் அனைத்து தரவு சம்பந்தமான அணுகுமுறைகளும் அமையும்.
மேலும், நாட்டில் இருக்கும் அனைத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களும், அன்னிய நேரடி முதலீடுகள் கொண்டவை அல்ல. அதனால், உள்நாட்டு நிறுவனங்களையும் மனதில் கொண்டு, கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Facebook Comments Box