நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தொடர்ச்சியாக மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை கூடிய மக்களவைவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை(பிப்.8) வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
Facebook Comments Box