பாகிஸ்தானின் மிர் அலி நகரில் புதன்கிழமை நடந்த ராணுவத் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிர் அலி நகரில் தீவிரவாத அமைப்பினர் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை அந்தப் பகுதியை சுற்றி வளைத்த ராணுவத்தினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் குடியிருப்பு வளாகத்திற்குள் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது ராணுவப் படையைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் இராணுவம் சமீப காலமாக வடக்கு வஜீரிஸ்தானில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box