இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,899 பேருக்கு கொரோனா உறுதி. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,07,90,183 ஆக அதிகரித்தது.
கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,80,455 ஆக அதிகரித்தது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 107 போ் உயிரிழந்தனா். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,703 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 15-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாடு முழுவதும் 1,55,025 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்) தகவல்படி, இதுவரை 19.92 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,42,841 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Facebook Comments Box