“தில்லியில் நேற்றைய வன்முறைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். மூவர்ணக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தை நாடு மறக்காது. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக விவசாயிகளை போராட்டம் நடத்த தூண்டியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் அரசு உள்ளது. சில விவசாயிகள் ஜனவரி 26-இல் இறுதி ஆட்டம் நடைபெறுவதாகக் கூறினர். பஞ்சாப் அரசு டிராக்டர்கள் மீது கவனம் செலுத்தி, அதிலுள்ள குற்றவாளிகளைக் கைது செய்திருக்க வேண்டும்.
ராகுல் காந்தி தொடர்ச்சியாக ஆதரவு மட்டும் தெரிவிக்கவில்லை, தூண்டியும்விட்டார். சிஏஏ போராட்டத்தின்போதும் இது நடைபெற்றது. காங்கிரஸ் பேரணி நடத்தி மக்களை வீதிக்கு வருமாறு தூண்டிவிடுகிறது. அடுத்த தினமே போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்திலும் அதுவே நடைபெற்றது. அவர்கள் விவசாயிகளைத் தூண்டிவிட்டனர்.
இளைஞர் காங்கிரஸின் நேற்றைய சுட்டுரைப் பதிவுகளும் காங்கிரஸுக்குத் தொடர்புடைய அமைப்புகளுமே இதற்கு சாட்சி.
தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் விரக்தியிலும் ஏமாற்றத்திலும் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதே நிலைதான். அதனால்தான் மேற்கு வங்கத்தில் அவர்கள் புதிய நட்புறவைத் தேடுகின்றனர். காங்கிரஸுக்கு நாட்டில் எப்படியாவது அமைதியற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸின் அரசியலில் அதுதான் மீதமுள்ளது. குடும்ப அரசியல் என்ன ஆகும் என்ற கவலை வந்துவிட்டது. அதனால்தான் இதுபோன்ற ஒவ்வொரு சூழலையும் அவர்கள் வன்முறையாக மாற்ற முயற்சிக்கின்றனர்.”
The post விவசாயிகளின் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதல் நடந்தது… அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box