நாட்டின் ராணுவ வலிமை, படைப்பலம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புது தில்லியில் பல்வேறு துறைகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவமும் பங்கேற்க உள்ளது.
இந்த அணிவகுப்பில் பங்கேற்க 122 வீரர்கள், வங்கதேச ராணுவ கமாண்டர் அபு முகமது ஷாஹூர் ஷாவன் தலைமையில் புது தில்லி வந்துள்ளனர்.
1971-ஆம் ஆண்டு போரின் போது வங்கதேசத்துக்கு இந்திய ராணுவம் உதவியதன் பேரில், விடுதலை பெற்று, இந்தியா – வங்கதேசம் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையிலும் இன்று நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பில் வங்கதேச ராணுவம் பங்கேற்கிறது.
The post முதல் முறையாக வங்கதேச ராணுவம் குடியரசு விழாவில் அணிவகுப்பு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box