%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AF%258B%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%2B%25E0%25AE%2589%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,54,533-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 15,948 போ குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,16,786-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.83 சதவீதமாகும்.
கொரோனா தொற்றுக்கு மேலும் 155 போ உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,339-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.44 சதவீதமாக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,84,408 போ சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.73 சதவீதமாக குறைந்துள்ளது.

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா உறுதி appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box