நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் கேக்கை நடிகர் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியது. இந்த புகைப்படம் வெளியான சிலமணி நேரத்தில் மிகவும் சர்ச்சையானது. இதற்கு முன்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அதே போன்ற நடவடிக்கை விஜய்சேதுபதி மீதும் எடுக்கப்படுமா? என்ற கேள்வி சமூக வலைத்தளத்தில் எழுந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து நடிகர் விஜய் சேதுபதி, எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் (Birthday) கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.
தற்போது நான் பொன் ராம் சார் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். அதில், பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். என்று கூறி இருக்கிறார்.
— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2021
https://platform.twitter.com/widgets.js
Facebook Comments Box