உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் ரூ.5,0,0100 நன்கொடை வழங்கியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் அலோக் குமார், ஆர்.எஸ்.எஸ் மூத்தத் தலைவர் குல்பூஷன் அஹுஜா, ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவரை அவரது மாளிகையில் சந்தித்தனர்.
அவர்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5,0,0100 நன்கொடையை வழங்கினார்.
இதற்கிடையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்.
Facebook Comments Box