நேட்டோ பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையொட்டி மார்க் ரூட் ஒருமனதாக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது போட்டியாளரான ரோமானிய ஜனாதிபதி கிளாஸ் லோஹ்னிஸ் கடைசி நிமிடத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராக அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Facebook Comments Box