அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பது எளிது என குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பிடன், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு முழு ஆதரவை வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் ஜோ பிடனை விட கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Facebook Comments Box