வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்து மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு ஆலோசகர் முகமது யூனுஸ் முடிவு செய்துள்ளார்.
ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, இந்துக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில், வங்கதேச அரசின் ஆலோசகராக பதவியேற்றுள்ள முகமது யூனுஸ், இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்தார்.
இந்து மாணவர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார். முன்னதாக வங்கதேசத்தில் இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box