கிழக்கு தைவானில் புதன்கிழமை தொடர்ச்சியாக 22 நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்கள் அதிர்ச்சில் உள்ளனர்.
இருப்பினும், மையப்பகுதி பசிபிக் பெருங்கடல் தளத்திற்கு கீழே தெரிவிக்கப்பட்டது; சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. காலை 6.52 மணிக்கு தொடங்கிய இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக இருந்தது, நாட்டின் பிற பகுதிகளில் 3 முதல் 5 அளவில் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக 22 பூகம்பங்களால் பயந்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் முந்தைய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ரிக்டர் அளவைக் கொண்டிருந்தது.
Facebook Comments Box