கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிரியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வரும் நிலையில், லெபனானியர்கள் முடிச்சு போட்டு சிரியாவை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். சிரியாவில் கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, லெபனான் எல்லையை ஒட்டிய சிரியா பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று நள்ளிரவு லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள கபார் யாபுஸ் நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது.மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

Facebook Comments Box