LPG டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – எரிவாயு தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு!

LPG டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு காரணமாக, 2025 முதல் 2030 வரை அமலுக்கு வரும் புதிய ஒப்பந்த விதிகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பாகும்.

அந்த விதிகளின்படி, இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்த முடியாது என்பதோடு, மூன்று அச்சு லாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த LPG லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இவை வெற்றியளிக்காத நிலையில், இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதன் விளைவாக, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Facebook Comments Box