நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சையை முடித்த பின்னர் சிறிது காலம் ஓய்வு பெறவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். அவர் தன்னை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக ரஜினி இரண்டு மத்திய அமைச்சர்களிடம் பேசியுள்ளார்.
இந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர் தமிழர். ரஜினி அவருடன் தமிழில் பேசியுள்ளார்.
இதனையடுத்து, மத்திய அரசு தனி விமானத்திற்கு அனுமதி வழங்கியது.
Facebook Comments Box