உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
இரண்டு நாள் டெல்லி பயணத்தில் இருக்கும் யோகி ஆதித்யநாத், நேற்று மாலை அமித் ஷாவை நேரில் சந்தித்தார்.
அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்கள் ட்விட்டர் கணக்கில் சந்திப்பை வெளியிட்டனர். அவர் நாளை இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிதின் பிரசாத் பாஜகவில் இணைந்த பின்னர் அமித் ஷாவுடனான யோகி ஆதித்யநாத் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related
Discussion about this post