பிரதமர் மோடி டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
“ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கினார்.
பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் மற்றும் தாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கினார்.