பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணை: இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்
பாகிஸ்தானின் தீவிரவாத அடையாளங்களுக்கு எதிரான “ஆப்ரேஷன் சிந்து” என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையின் போது, இந்தியா தனது அதிநவீன சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ்ஐ பயன்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரபூர்வமல்லாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்களும், பாதுகாப்புக்கான உறுதியும் இந்த நடவடிக்கையில் பிரதிபலித்தன.
இந்தியாவின் ராணுவ வளர்ச்சிக்கான அடித்தளம் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டப் பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் (IGMDP) என்பதன் மூலமே வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பிரித்வி, அக்னி, திரிசூல், ஆகாஷ், நாக் போன்ற ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவுடன் இணைந்து 1998-இல் உருவான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், உலகின் ஒரே சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அமைப்பை உருவாக்கியது. இந்த ஏவுகணைக்கு “பிரம்மபுத்திரா” மற்றும் “மாஸ்க்வா” என்ற நதிகளின் பெயர்கள் இணைத்து “பிரம்மோஸ்” என பெயரிடப்பட்டது.
பிரம்மோஸ், அதன் அதிக வேகம் (Mach 2.8), துல்லியம், மற்றும் பல்துறை தாக்குதல்களுக்கான திறனால் இந்தியா மட்டும் அல்லாது, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிலம், கடல், வான்பரப்பிலிருந்து ஏவக்கூடிய இதன் திறனைச் சுட்டிக்காட்டுவது போலவே, சுகோய்-30 போன்ற விமானங்களில் ஏற்றி, நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இது ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையின் துரிதமான தாக்கத்தால், எந்தவொரு எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளாலும் இடைமறிக்க முடியாதது. தற்போது, இதன் ரேஞ்ச் 1500 கிமீ வரை விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலைகளையும் அமைத்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்துபோன்ற ரகசிய நடவடிக்கைகளில் இந்த ஏவுகணையின் பயனடைவது, இந்தியாவின் தொழில்நுட்ப சாதனைகளையும், பாதுகாப்புத் துறையின் தன்னிறைவை உலகிற்கு எடுத்துச் செல்கிறது. எதிர்காலத்தில், குறைந்த எடையுடன் அதிக செயல்திறன் கொண்ட புதிய தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாராகி வருகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு திறனில் பிரம்மோஸ் ஒரு மைல்கல்லாக திகழ்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.