இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,00,636 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: நாட்டில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, கொரோனா தொற்றால் 1,00,636 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,89,09,975ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 14,01,609 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தொடா்ந்து 7-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 1,74,399 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,71,59,180ஆக உயர்ந்துள்ளது. தொடா்ந்து 25-வது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்தவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனாவுகு இன்று 2,427 பேர் பலியானார்கள்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,49,186ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23,27,86,482 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை அளவிலான 24 மணி நேரத்தில் 15,87,589 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 36,63,34,111 கோடி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Facebook Comments Box