சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம்

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது உறுப்பினர் பாகிஸ்தானில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்

ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) என்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்த அப்துல் அஜிஸ், இந்தியாவை பல துண்டுகளாகப் பிரித்து விடுவேன் என கடந்த மாதம் கடுமையான மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில் அவர் மர்மமான சூழலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய சில சமூக ஊடகங்கள் உறுதி செய்துள்ளதுடன், பஹவல்பூரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அரசியல் அதிகாரிகள் அல்லது ஜெய்ஷ் அமைப்பினர் இதுகுறித்து எந்தவிதமான உறுதியையும் வழங்கவில்லை.

மேலும், மே 7-ம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் நடவடிக்கையின் கீழ், இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்கினர். இதில் பஹவல்பூரில் செயல்பட்ட ஜெய்ஷ் முகாமும் ஒன்று என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

Facebook Comments Box