விஜய் ரூபானிக்கு ‘1206’ என்ற அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்

0

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான விஜய் ரூபானியும் (வயது 68) உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் வசிக்கும் தனது மகளைச் சந்திக்க விஜய் ரூபானி பயணித்துக் கொண்டிருந்தபோது, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விமானம் வெடித்து சிதைந்து, பயணிகள் மற்றும் பணியாளர்களாக இருந்த 242 பேரில் ஒருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஜய் ரூபானிக்கு “1206” என்ற எண் மிக முக்கியமான அதிர்ஷ்ட எண்ணாக இருந்தது. அவர் தனது வாகன பதிவு எண்களிலும் இதையே பயன்படுத்துவார். ஆனால், கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் அவர் உயிரிழந்தது அவரது அதிர்ஷ்ட எண்ணான 12.06 (தேதி) துரதிர்ஷ்டமயமாக மாறியதாக அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது இருக்கை எண் 12, விமானம் புறப்பட்ட நேரம் 12:10 என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த எண்ணுடன் இருந்த அவரது பற்றும் நம்பிக்கையும் இப்போது சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் 1956 ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்த ரூபானி, 1996-97 காலகட்டத்தில் ராஜ்கோட் மாநகர மேயராகவும், 2006-2012 இடைப்பட்ட காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் 2016 முதல் 2021 வரை குஜராத் மாநில முதல்வராகவும் இருந்தார். மேலும் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here