அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை நோக்கி AI-159 எனும் விமானம் நேற்று ஜூன் 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டிருப்பதை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதிப்படுத்தியுள்ளது.

AI-171 எனும் விமானம் வழக்கமாக இந்த பாதையில் இயக்கப்படுகிறது. ஆனால் ஜூன் 12 ஆம் தேதி அந்த விமானம் ஒரு விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, ஜூன் 17 முதல் அதற்கு மாற்றாக AI-159 என்ற எண்ணுடைய புதிய விமான சேவை துவக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செயல்பாட்டு காரணங்களால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“செயல்பாட்டு சிக்கல்கள்” என்ற பொதுவான காரணம் கூறப்பட்டுள்ளதோ தவிர, அதற்கான விவரங்கள் வழங்கப்படவில்லை. கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட AI-171 விமானம் குறுகிய நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர, ஏனையவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box