பயங்கரவாதம் எதிர்ப்பு நடவடிக்கைகள்: ரூ.2,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்

பயங்கரவாதம் எதிர்ப்பு நடவடிக்கைகள்: ரூ.2,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்

பாதுகாப்பு அமைச்சகம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க, ரூ. 2,000 கோடி மதிப்பிலான புதிய ஆயுதத் தளவாடங்களை வாங்க 13 அவசர ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அவசரகாலக் கொள்முதல் நெறிமுறைகள் கீழ், மொத்தம் ரூ. 1,981.90 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கம், பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் விரைந்து செயல்படுவதற்கான திறனை மேம்படுத்துவதாகும்.

கொள்முதல் செய்யப்படும் முக்கிய ஆயுதங்கள்:

  • ஒருங்கிணைந்த ட்ரோன் கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு அமைப்புகள்
  • குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள்
  • மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள்
  • ஏவுகணைகள்
  • தொலைதூர இயக்கக் கூடிய வான்வழி வாகனங்கள் (RPAV)
  • செங்குத்தாக பறந்து தரையிறங்கும் போர் விமானங்கள்
  • குண்டுத் துளையில்லா ஜாக்கெட்டுகள்
  • கனரக, நடுத்தர விரைவு எதிர்வினை போர் வாகனங்கள்
  • இரவில் இலக்கை அடையாளம் காணும் சிறப்புத் துப்பாக்கிகள்

இந்த புதிய ஆயுதங்கள் பாதுகாப்பு படைகள் எதிர்கொள்ளும் வளர்ந்துவரும் சவால்களை சமாளிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box