நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: 100 இடங்களுக்குள் இந்தியா
ஐக்கிய நாடுகள் அமைப்பின் “நிலையான மேம்பாட்டு தீர்வு நெட்வொர்க்” (Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ள 10-வது SDG (Sustainable Development Goals) தரவரிசையில், இந்தியா முதன்முறையாக 100 சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், 193 நாடுகளில் இந்தியா 99-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதுவே இந்தியாவுக்கு இந்த பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் கிடைக்கும் ஆரம்ப வெற்றியாகும்.
அண்டை நாடுகளில்:
- சீனா – 49-வது இடம்
- பூடான் – 74
- நேபாளம் – 85
- இலங்கை – 93
- வங்கதேசம் – 114
- பாகிஸ்தான் – 140
- மாலத்தீவுகள் – 53
இந்த தரவரிசையில் ஐரோப்பிய நாடுகள் வழக்கம்போல முன்னணியில் உள்ளன.
- பின்லாந்து – 1-வது இடம்
- ஸ்வீடன் – 2
- டென்மார்க் – 3
முதல் 20 இடங்களில் 19 இடங்களும் ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்துள்ளன.
2015-ம் ஆண்டு தொடக்கம் கணக்கீட்டில் கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள், குறிப்பாக நேபாளம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் மற்றும் மங்கோலியா ஆகியவை கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளன.
அதேபோல், பெனின், பெரு, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், கோஸ்டா ரிகா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் நிலையான வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.