மதச்சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகள் நீக்கம் குறித்து ஆர்எஸ்எஸ் கருத்து – காங்கிரஸ் கடும் விமர்சனம்

மதச்சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகள் நீக்கம் குறித்து ஆர்எஸ்எஸ் கருத்து – காங்கிரஸ் கடும் விமர்சனம்

அரசியலமைப்பின் முகப்பில் உள்ள “மதச்சார்பின்மை” மற்றும் “சோசலிசம்” போன்ற சொற்களை நீக்க பரிசீலிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பரிந்துரைத்த நிலையில், அந்த அமைப்பு இந்திய அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில்,

“1949ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியில் இருந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியலமைப்புக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அவர்கள் மனுஸ்மிருதியை மாதிரியான அரசியலமைப்பையே விரும்பினர். அம்பேத்கர் மற்றும் நேருவைப் போல அரசியலமைப்பை உருவாக்கியோரை அவர்கள் விமர்சித்தனர்,” எனத் தெரிவித்தார்.

மேலும்,

“புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சார்பில் முந்தைய நாட்களில் பலமுறை முன்வைக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடியின் பிரச்சார முழக்கம் ‘400க்கு மேல்’ என்றதாக இருந்தது – இது அரசியலமைப்பை மாற்றும் நோக்கத்துடன் கூறப்பட்டது. ஆனால் மக்கள் இதை உறுதியாக நிராகரித்தனர்,” என்றும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ் மேலும்,

“நவம்பர் 25, 2024 அன்று, இந்திய தலைமை நீதிபதி இந்த same விஷயத்தில் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார்” என்றும் கூறினார். இந்த நீதிமன்ற தீர்ப்பின் நகல்களையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.

Facebook Comments Box