தேசிய பொது ஒத்துழைப்பு, குழந்தை மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் மாற்றம்: சாவித்ரிபாய் புலே கவுரவிப்பு

தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனம் (National Institute of Public Cooperation and Child Development – NIPCCD) இப்போது அதிகாரபூர்வமாக சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (Savitribai Phule National Institute of Women and Child Development) என மறுபெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தொடர்பை பலப்படுத்துதல் மற்றும் பிராந்திய திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜார்க்கண்டின் ராஞ்சியில் ஒரு புதிய பிராந்திய மையம் 2025 ஜூலை 4 அன்று திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மையம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கிழக்குப் பிராந்திய மாநிலங்களுக்கு மையமாக மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா மற்றும் மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷண் 2.0 ஆகிய திட்டங்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சி மற்றும் ஆய்வுத் தேவைகளை பூர்த்தி செய்யும்.

முன்னதாக, இந்த மாநிலங்களின் பயிற்சி தேவைகள் கவுகாத்தி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் அமைந்துள்ள மையங்கள் வாயிலாக சீராக வழங்கப்பட்டன. எனினும், பயண தூரம் நீண்டதாதாக இருப்பதால், பல துறை செயற்பாட்டாளர்கள் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

இந்த நிகழ்வின் போது பேசிய மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “நிறுவனத்தின் புதிய பெயர் மாற்றம், இந்திய சமூக மாற்றங்களை முன்னெடுத்த சாவித்ரிபாய் புலேவுக்கு மரியாதை செலுத்தும் ஒரு சிறப்பு அங்கீகாரமாகும். இது, மகளிர் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பும் ஆகும்” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, “ராஞ்சியில் அமைக்கப்படும் இந்த புதிய மையம், கிழக்குப் பிராந்தியத்தில் குறிப்பிட்ட திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இது, முனைப்புடன் பணியாற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவுகளை வழங்கும் ஒரு தளமாக மட்டுமல்லாமல், மத்திய அரசின் முக்கியமான திட்டங்களை அடிப்படையில் வலுப்படுத்தவும் உதவுவதற்கான ஒளிவிழியாக அமையும்.”

இந்தியா @2047 இலக்கை நோக்கி முன்னேறும் நமது பயணத்தில், ஒரு பெணும் அல்லது ஒரு குழந்தையும் பின்தங்காமல் இருக்க இது உறுதியளிக்கும் ஒரு முக்கியமான வழிமுறையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box