தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த திட்டத்தை உருவாக்கியவர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட தீவிரவாதி தஹாவூர் ரானா என விசாரணையில் தெரிய வந்தது.

அவரை அமெரிக்காவில் இருந்து இந்திய புலனாய்வுத்துறையினர் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி டெல்லிக்கு அழைத்துவரினர்.

அவர் மீது விசாரணை நடைபெறுவதற்காக விதிக்கப்பட்ட காவலின் காலாவதி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், அவரை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜித் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Facebook Comments Box