பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார்.
முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக தலைவர்களுடன் கலந்துகொண்டு மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று நமீபியாவுக்கு அவர் வந்துள்ளார். நமீபியா நாட்டின் விண்ட்ஹோக் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்று மகிழ்ந்தார்.

விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், அவர்கள் வைத்திருந்த டிரம்ஸை வாசித்து பிரதமர் மோடி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

முன்னதாக, பிரேசிலில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரேசிலில் பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

நமீபியா நாட்டின் விருது: பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிராபிலிஸ்’ என்ற விருதும் வழங்கப்பட்டது. தலைநகர் விண்ட்ஹோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் அதிபர் நெடும்போ நந்தி-தைத்வா இந்த விருதை வழங்கினார்.
Facebook Comments Box