100-க்கும் அதிகமான தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ரோஹன் சல்டானா மங்களூருவில் கைது!

Daily Publish Whatsapp Channel


100-க்கும் அதிகமான தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ரோஹன் சல்டானா மங்களூருவில் கைது!

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரோஹன் சல்டானா (வயது 42), வியாபார உலகத்தில் ரியல் எஸ்டேட் முதலீட்டாளராகவும், கோடீஸ்வரராகவும் தன்னை சித்தரித்தார். அவர், மிகுந்த செல்வாக்கு மற்றும் செல்வச் சாதனைகளுடன் வாழும் ஒருவராகக் காட்டிக்கொண்டு, பெங்களூரு, மங்களூரு, கோவா, மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் தன்னை நம்ப வைக்கச் செய்து, பெரும் தொகையில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்துள்ளன.

இதனையடுத்து, போலீசார் கடந்த இரவு மத்திய இரவு நேரத்தில், மங்களூருவில் உள்ள ஜேபினமோகர் பகுதியில் ஓடிச் சென்ற ரோஹன் சல்டானாவை, ஒரு உயர் மதிப்புள்ள காரில் பயணிக்கும்போது கைது செய்தனர். பின்னர், அவர் வசிக்கும் பங்களாவிற்கு சென்ற அதிகாரிகள், விரிவான சோதனையை நடத்தினர்.

அந்த பங்களா ஒரு இளம் வயதிலேயே செல்வத்தால் சூழப்பட்ட உயர்தர வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. பங்கலாவில் விலை உயர்ந்த கார்கள், ரகசிய அறைகள், அரிய வகை தாவரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.72 லட்சம் மதிப்புள்ள பழமையான மதுபானங்கள், பிரீமியம் வகை வாசனை திரவியங்கள், ₹35 லட்சம் ரொக்கப்பணம், 667 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.2.76 கோடி மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முடிவிலில்லாத மோசடி மாயாஜாலம்:

மங்களூரு காவல்துறையினர் அளித்த தகவலின்படி, ரோஹன் சல்டானா, அரசியல் பிணைப்புகளும், பணப் புகழும் கொண்டவர். தொழிலதிபர்களிடம் நெருங்கி நட்பாகிவிட்டு, அவர்களுக்கு ₹50 கோடி முதல் ₹1000 கோடி வரை குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கித் தருவதாக நம்பிக்கை ஏற்படுத்துவாராம். இந்த ‘சந்தர்ப்பத்திற்கு’ முன், ₹50 லட்சம் முதல் ₹5 கோடி வரை ‘கமிஷன்’ தொகையாக கேட்டுவிட்டு, அந்தத் தொகையை பெற்றவுடன் எளிதில் காணாமல் போய்விடுவாராம்.

அவ்வாறு ஏமாற்றப்பட்ட தொழிலதிபர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளதுடன், இவ்விதமான மோசடிகள் மூலம் சல்டானா ரூ.300 கோடி வரையிலும் மக்களிடம் பணம் பறித்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box