பிரதமர் மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம்

Daily Publish Whatsapp Channel

பிரதமர் மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 23 முதல் 26 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“இந்த சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய விடயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்.

மேலும், மன்னர் சார்லஸ் III ஐ சந்திக்க உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாலத்தீவுக்கு பிரதமர் பயணம்:

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ மாலத்தீவு பயணம் ஜூலை 25 ஆம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி “கவுரவ விருந்தினராக” பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்தியா–மாலத்தீவு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box